This Article is From Aug 28, 2018

நிவாரண முகாம்களை பார்வையிட கேரளா வந்தார் ராகுல் காந்தி! #LiveUpdates

முதற்கட்டமாக கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கிட்டதில், 20,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நிவாரண முகாம்களை பார்வையிட கேரளா வந்தார் ராகுல் காந்தி! #LiveUpdates
Thiruvananthapuram:

வெள்ளத்தால் பாதிப்படைந்து நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களை காண கேரளா வந்தடைந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. இரண்டு நாட்கள் கேரளாவில் தங்கி நிவாரண முகாம்களை பார்வையிட உள்ளார் ராகுல். மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களையும், மீனவர்களையும் இன்று ராகுல் சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, கேரள வெள்ளம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகள் இட்டு வந்தார். குறிப்பாக அவர், பிரதமர் மோடியிடம் கேரள வெள்ளம் ஒரு தேசிய பேரிடர் என்று அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார். 

மோடி தலைமையிலான அரசு, முதற்கட்டமாக வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி ரூபாய் அறிவித்தது. அதற்கு ராகுல், ‘இது நல்ல விஷயம்தான். ஆனால், ஏற்பட்டுள்ள சேதாரங்களுக்கு இது ஈடாகாது’ என்றார். முதற்கட்டமாக கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கிட்டதில், 20,000 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் பெரும்பான்மையான இடங்களில் இருந்து வடியத் தொடங்கியதை அடுத்து, வீடுகள் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. 

லைவ் அப்டேட்ஸ்:

 

காலை 12.36 - ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் முகாமுக்கு சென்று மக்களின் நிலைமையை கேட்டறிந்தார்.

காலை11.37 - கிறித்துவக் கல்லூரியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி

காலை 11.14 - கேரளா சென்ற ராகுல் காந்திரை சசி தரூர் மற்றும் உம்மன் சாண்டி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். 

காலை 9:41- கேரளா வந்த ராகுல் காந்தியை, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வரவேற்றார். இது குறித்து தரூர், ‘திருவணந்தபுரம் வந்த ராகுல் காந்தியை வரவேற்றேன். அவர் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடங்களை பார்வையிடுவார். இந்த வெள்ளத்தில் மீட்புப் பணிகளில் மிக தீரமாக ஈடுபட்ட மீனவர்களை அவர் சந்திப்பார்’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

.