This Article is From Feb 14, 2019

பொதுக்கூட்டத்தில் ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட பெண்!

Valentine's Day 2019: ஒரு பெண் ராகுல் தலையை இறக்கி அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.

பொதுக்கூட்டத்தில் ராகுல் கன்னத்தில் முத்தமிட்ட பெண்!

ராகுல் தலையை இறக்கி அவரது கன்னத்தில் ஒரு முத்தமிட்டதும் ராகுல் வெட்கமடைந்தார்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் முத்தமிட்டுள்ளார். முக்கியமாக இன்று காதலர் தினமான நிலையில், இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து வெளியான வீடியோவில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத்தின் காந்திநகர் பகுதியில் இருந்து 360 கிமீ தொலைவில் உள்ள வால்சாட் பகுதியில் பொதுக்கூட்டத்தின் மேடையில் இருந்தபோது, மாலைகள் மற்றும் மலர்களுடன் பெண்கள் சிலர் மேடையில் ஏறினர். அப்போது ராகுல் காந்தி எழுந்து நின்று அந்த பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த நேரத்தில், ஒரு பெண் ராகுல் தலையை இறக்கி அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இந்த சம்பவம் ராகுலை வெட்கமடைய செய்தது.

இதைத்தொடர்ந்து, மற்ற பெண்கள் ராகுலை சூழ்ந்துகொண்டு அவருக்கு மாலைகள் அணிவித்தனர். அப்போது, ராகுலை முத்தமிட்ட அந்த பெண் அவரது கன்னத்தை பிடித்து கிள்ளினார். அப்போது ராகுல் இதனை கவனமாக கையாளும் விதமாக சற்று தள்ளி நின்றார்.

இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை காதலர் தினத்துடன் ஒப்பிட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வால்சாட் பகுதிக்கு ராகுல் வருகை தருவது இதுவே முதல்முறையாகும். பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் சவால் விடுத்தது. எனினும் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

குஜராத் மாநிலத்தில் இருந்து இன்று தொடங்கினார். சிவப்பு வெங்காயம் எனப் பொருள்படும் லால் துங்கிரி என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து ராகுல் தனது பரப்புரையைத் தொடங்கினார். இதே இடத்திலிருந்து 1980ல் இந்திரா காந்தியும், 1984-ல் ராஜீவ் காந்தியும், 2004-ல் சோனியா காந்தியும் பரப்புரையை தொடங்கி ஆட்சியைப் பிடித்ததால், ராகுலும் தற்போது தனது பரப்புரையை இங்கிருந்து தொடங்கினார்.

.