This Article is From Nov 14, 2019

ராகுல் காந்தி மிக கவனமாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ராகுல் காந்தி மிக கவனமாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

சபரிமலை மற்றும் ரஃபேல் மறு சீராய்வு வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

New Delhi:

ராகுல் காந்தி மிக கவனமாக பேச வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம் அவர் மீதான அவதூறு வழக்கையும் முடித்து வைத்தது. 

நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமே, பிரதமர் மோடியை, 'காவலாளியே திருடன்' என கூறியதாக ராகுல் காந்தி கூறியிருந்தது கடும் சர்ச்சையான நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால், இந்த வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 
 
With input from PTI

Disclaimer: NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal.

.