Read in English
This Article is From Jun 01, 2019

நேருவை போன்றவர் ராகுல் காந்தி : காங்கிரஸ்க்கு அவர் நிச்சயம் தேவை - திமுக

“காங்கிரஸ் பரந்த அடிப்படையிலான கட்சியாகும். ராகுல் காந்தி பரந்த மனப்பான்மையுடயவர்தான் கட்சியை திசை திருப்ப அவசியம் தேவை” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai:

திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேருவை போன்றவர் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் பழமையான அரசியல் கட்சிக்கு ‘தாராளவாத சித்தாந்தங்கள்' கொண்ட அரசியல்வாதிதான் தேவை என்று கூறியுள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தன்னுடைய அரசியல் பயணத்தில் அடிமட்ட மக்கள் வரை சென்றடைய வேண்டும் என்று கூறியுள்ளது. ராகுல் காந்தி தான் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலக முயற்சிக்கிற  வேளையில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கடுமையான தோல்விக்குப் பின் ராகுல் காந்தி அடுத்தடுத்த முடிவினை எடுத்து காங்கிரஸினை குழப்பத்திற்குள் ஆழ்த்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத விரோதப் போக்கு, பொருளாதார சமத்துவமின்மை, வறுமை என்று இருக்கும் சூழலில் “காங்கிரங்கிரஸ் பரந்த அடிப்படையிலான காட்சியாகும். ராகுல் காந்தி பரந்த மனப்பான்மையுடயவர்தான் கட்சியை திசை திருப்ப அவசியம் தேவை” என்று அதில் கூறப்பட்டிருந்தது. 

Advertisement

ஜவஹர்லால் நேருவைப் போலவே, ராகுல் காந்தி நாட்டில் மக்களோடு இணைந்து அரசியல் பயணத்தை செய்கிறார். அரசியலின் எல்லைகளை விரிவாக்குகிறார். “காங்கிரஸின் தாராளவாத சித்தாந்த நிலைபபாட்டினை ராகுல் காந்தி பிரபலிக்கிறார். வலுவான காங்கிரஸ் கோட்டையின் செங்கலாக இருக்கிறார். அது ஒரு மலையைக் காட்டிலும் உறுதியானதாக இருக்கும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் தோல்வியின் போது நேரு -காந்தி குடும்பத்தையே காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இந்த முறை தேர்தல் தோல்விக்கும் ராகுல் காந்தியை குற்றவாளியாக்க முற்படுகிறது காங்கிரஸ் கட்சி. தேர்தல் பணியினை காங்கிரஸ் கட்சி சரிவர செய்யவில்லை என்றும் சாடியுள்ளது. 

Advertisement

Advertisement