அரசியலில் ராகுல் தோல்வி அடைந்து விட்டதாக கூறுகிறார் பாஜக எம்.பி.
Unnao: ராகுல் காந்தியைப் பார்த்து பச்சோந்தியே வெட்கப்பட்டு விடும் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில சமயம் பூணூல் அணிந்து கொள்வார். சில சமயம் சிவ பக்தராக மாறி விடுவார். இன்னும் சில நேரங்களில் என்னவெல்லாமோ செய்வார். அவரைப் பார்த்தால் பச்சோந்தியே வெட்கப்பட்டு விடும்.
அரசியலில் ராகுல் காந்தி தோற்று விட்டார். எனவேதான் பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி வருகிறார். இன்னும் கொஞ்ச நாளில் அவரும் தோற்று விடுவார்.
இவ்வாறு பாஜக எம்.பி. கூறினார்.