This Article is From Aug 29, 2020

2024ல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரஸை வழிநடத்த முடியாது: கடிதம் எழுதியவர்

2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார்,

2024ல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரஸை வழிநடத்த முடியாது: கடிதம் எழுதியவர். (File)

ஹைலைட்ஸ்

  • Rahul Gandhi had quit after the 2019 election debacle
  • Two months later, his mother Sonia Gandhi returned as interim chief
  • Letter-writers say they will continue to meet and discuss their concerns
New Delhi:

தொடர்ச்சியாக இரண்டு முறை தேசிய தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில், 2024ல் வெற்றி பெற ராகுல் காந்தி காங்கிரஸை வழிநடத்த முடியாது என தலைமை குறித்து கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, "ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024ல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் கூறும் நிலையில் இல்லை. 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில், கட்சியால் தேவையான இடங்களைப் பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

சமீப மாதங்களாக, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. 2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார், இதையடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது தாயார் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார். 

நாக்பூர் முதல் சிம்லா வரை (நாட்டின் வடக்குப் பகுதியில்) கட்சிக்கு 16 இடங்கள் உள்ளன, அதில் எட்டு இடங்கள் பஞ்சாபிலிருந்து வந்தவை. நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும், களத்தில் வேறு ஒரு உண்மை இருக்கிறது. அடுத்து கூட்டம் நடந்தால், இந்த விவகாரம் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பேன். 

இந்த யுத்தம் தனிநபர்களைப் பற்றியது அல்ல, பிரச்சினைகளை பற்றியது என்று வலியுறுத்திய அவர், கட்சி மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் சிறந்த அரசியலமைப்பு விழுமியங்களின் அடிப்படையில் மாற்றுக் கதைகளை உருவாக்க உதவுவது காங்கிரசுக்கு உதவும் என்றார்.

அவரைப் பொறுத்தவரை, கடித எழுத்தாளர்களில் பெரும்பாலோர் நீண்ட காலமாக அரசியலில் இருப்பதால், அவர்கள் கட்சிக்கு உறுதியுடன் இருப்பதாகவும், சோனியா காந்தி மீது மிக உயர்ந்த மரியாதை இருப்பதாகவும் கூறுகிறார்கள். எழுப்பப்பட்ட பிரச்சினைகள் கட்சி பிழைத்து பாஜகவை கைப்பற்றுவதில் வெற்றிபெற உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

.