বাংলায় পড়ুন
This Article is From Jul 27, 2020

“எனது அரசியல் வாழ்க்கையே இல்லாவிட்டாலும் கூட நான் பொய் சொல்ல மாட்டேன்”: ராகுல் காந்தி ஆதங்கம்!

“எனக்கு அரசியல் வாழ்க்கை இல்லையென்றால் கூட எனக்கு கவலையில்லை, ஆனால் இந்திய பிரதேசத்தைப் பொருத்தவரை நான் உண்மையைச் சொல்லப் போகிறேன்.”  என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • Rahul Gandhi has been targeting government relentlessly over China issue
  • "The Chinese have occupied Indian land," he tweeted today
  • "As an Indian, my number one priority is the nation, its people," he said
New Delhi:

சமீபத்தில் லடாக்கின் கிழக்குப்பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது விமர்சித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதில், “சீனர்கள் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். உண்மையை மறைப்பது தேச விரோதமானது. எனது வாழ்நாட்கள் முழுவதும் மோசமாக கழிந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நான் இந்திய பிரதேசத்தைப் பற்றி பொய் சொல்லப் போவதில்லை. உண்மையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் தேசபக்தி.” என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.

“இப்போது சீனர்கள் நம்முடைய எல்லைக்குள் நுழைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு இந்தியனாக இது என்னைத் தொந்தரவு செய்கிறது ... என் இரத்தத்தை கொதிக்க வைக்கிறது. அந்நிய தேசங்கள் நம் எல்லைக்குள் எப்படி ஊடுருவ முடியும்?”

“சீன வீரர்கள் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லையென என்னால் பொய் சொல்ல இயலாது. செயற்கைக்கோள் படங்கள் ஊடுருவலை உறுதி செய்துள்ளன. எனவே நான் பொய் சொல்ல விரும்பவில்லை.” என ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement

“எனக்கு அரசியல் வாழ்க்கை இல்லையென்றால் கூட எனக்கு கவலையில்லை, ஆனால் இந்திய பிரதேசத்தைப் பொருத்தவரை நான் உண்மையைச் சொல்லப் போகிறேன்.”  என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமர்சனம் குறித்து “ராகுல் காந்தி தினசரி அடிப்படையில் ட்வீட் செய்கிறார். மக்கள் மத்தியில் காங்கிரஸ் எந்த வேலையும் செய்யாததால், ஒவ்வொரு தலைவரையும் இழந்து வருவதால் காங்கிரஸ் ட்வீட் கட்சியாக மாறும் என்று தெரிகிறது. விரக்தியடைந்த மற்றும் மனச்சோர்வடைந்த கட்சி அனைத்து வகையான தாக்குதல்களையும் நடத்த முயற்சிக்கிறது.” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராகுலின் இந்த விமர்சனம் குறித்து பதிலளித்துள்ளார்.

Advertisement
Advertisement