This Article is From May 17, 2019

“முதல் செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமருக்கு வாழ்த்துகள்!”- ராகுல் ப்ரஸ் மீட் ஹைலைட்ஸ்

"பிரதமர் மோடியிடம் நான் பல முறை விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டுள்ளேன்."

“முதல் செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமருக்கு வாழ்த்துகள்!”- ராகுல் ப்ரஸ் மீட் ஹைலைட்ஸ்

பாலகோட் தாக்குதல் குறித்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்- செய்தியாளர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பதில் அளித்தனர். பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு நடந்த அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். 

அந்த சந்திப்பின் ஹைலைட்ஸ் இதோ:

“பிரதமர் நரேந்திர மோடி, முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். இது ஒரு நல்ல துவக்கம். இது நல்ல விஷயம்.

செய்தியாளர்களாகிய உங்களுக்கு நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். பிரதமர் மோடியிடம் மிகவும் கடினமான கேள்விகளை கேளுங்கள். நீங்கள், என்னிடம் எப்போதும் கடினமான கேள்விகளை கேட்கிறீர்கள். 

பாலகோட் தாக்குதல் குறித்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். 

தேர்தல் ஆணையம், பாஜக-வுக்கு ஆதரவாக நடந்து கொள்வது பட்டவர்த்தனமாக தெரிகிறது. இந்த மொத்த தேர்தல் அட்டவணையும் பாஜக-வுக்கு சாதகமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் தேர்தல் ஆணையம், எப்படி ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்பதைப் பார்த்தார்கள். 

நான் பிரதமர் வேட்பாளரா என்று பலர் கேட்கின்றனர். அது குறித்து நான் தற்போதைக்குப் பேச மாட்டேன். காரணம், இன்னும் தேர்தல் முடிவுகள் வெளிவரவில்லை. மக்கள் தீர்ப்பளித்த பின்னர் அது குறித்து நான் பேசுவேன். 

பிரதமர் மோடியிடம் நான் பல முறை விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டுள்ளேன். ரஃபேல் விவகாரம் தொடர்பாக நான் அவரை விவாதத்துக்கு வாருங்கள் என்று கூறியுள்ளேன். ஆனால், இதுவரை அதற்கு பின்னூட்டம் அளிக்கவில்லை. எனவே, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடியிடம் ஒன்றை மட்டுமே கேட்கிறேன். ரஃபேல் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களுக்காகவது தெரிவியுங்கள்.

உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை, பாஜக-வை வீழ்த்துவதுதான் எங்களின் முதல் நோக்கம். அது குறித்து எனது கட்சிக்காரர்களிடம் நான் தெளிவாக தெரிவித்துள்ளேன். எனவே, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி வைத்துள்ளதை நான் மதிக்கிறேன். மாயாவதி, அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட யாவரும் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 


 

.