குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனைத்து சலுகைகளையும் வழங்குவதால் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
New Delhi: ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். இன்று அவரது மக்களவை தொகுதியில் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் உள்ள ஏழை மக்களிடம் பணத்தை பிடுங்கி அனில் அம்பானியிடம் அளிக்கிறார் என்று பிரதமர் மோடியை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில் அனில் அம்பானி மட்டும் எப்படி ஒப்பந்தம் பெற்றார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு ரஃபேல் பிரச்னையை எழுப்பினேன். ஆனால் அவர் என் கண்களைப் பார்த்து பேச மறுத்து விட்டார். என்னைப் பார்த்து பேசுவதற்கு அவருக்கு தைரியம் இல்லை.
மத்திய பாஜக ஆட்சியில் ஏழைகளும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள நலத்திட்டங்கள் அனைத்தையும், 5-10 பேருக்கு மட்டுமே மத்திய அரசு அளிக்கிறது. அவர்கள் யாரென்றால் அனில் அம்பானி, விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்கள் என்று பேசினார்.