விவாயிகளை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசார்! எதிர்கட்சியினர் கடும் கண்டனம்!
Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் ஏழை விவசாயிகளை கண்மூடித்தனமாக போலீசார் தாக்கியது தொடர்பான வீடியோ நாடு முழுவதும் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் உட்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி விவசாயக் குடும்பம் தாக்கப்படும் வீடியோவை தனது ட்விட்டர் பதிவேற்றும் செய்ததோடு,, இந்த மனப்பான்மை மற்றும் அநீதிக்கு எதிரானது எங்கள் போராட்டம், என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்படும் அந்த விவசாயிகள். விவசாய நிலத்தை விட்டு தரமாட்டோம் என்று அதிகாரிகளுடன் மன்றாடுகின்றனர். எனினும், அரசுக்கு சொந்தமான அந்த இடத்தில் கல்லூரி கட்ட உள்ளதால், பயிர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மனதை உருக்கும் அந்த வீடியோவில், அந்த விவசாயக் குடும்பத்தினரை போலீசார் தரதரவென்று இழுத்துச்செல்கின்றனர். பல போலீசார் ஒன்று சேர்ந்து கண்மூடித்தனமாக லத்தியால் தாக்குவதும், கால்களால் எட்டி உதைப்பதுமாக உள்ளனர். இதனை பார்த்து கதறிக்கொண்டிருக்கும் அந்த விவசாயிகளின் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை கைகளை பற்றிக்கொள்ள முனைகிறது. எனினும், போலீசார் அந்த குழந்தைகளை தள்ளி விடுகின்றனர்.
இதுதொடர்பாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, குணா மாவட்டத்தின், ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.