This Article is From May 28, 2019

ராஜினாமா முடிவில் உறுதி: ராகுலிடம் ஸ்டாலின் சமாதான முயற்சி!

ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ள ராகுல் காந்தியிடம், தேர்தலில் தோற்றாலும், மக்களின் மனதை வென்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Written by

நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் இருக்கும் 542 தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 90 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இரானியிடம், ராகுல் கடும் தோல்வியை சந்தித்தார்.

எனினும், முன்னெச்சரிக்கையாக கேரளாவின் வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டதால், அங்கு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், காங்கிரஸின் தோல்வி குறித்து ஆலோசிக்கும் வகையில், கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடியது.

இதில், ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று, தான் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், ராகுல் தனது ராஜினாமா செய்வதான முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுத்தாகவும் தெரிகிறது.

Advertisement

இந்நலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது அவர், தேர்தலில் தோற்றிருக்கலாம், ஆனால் மக்களின் மனதை வென்றுள்ளீர்கள். எனவே தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று ராகுலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement