Read in English
This Article is From Aug 14, 2020

கொரோனா தடுப்பூசி அணுகல் உத்தியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி

Coronavirus Vaccine India: கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா விரைவில் ஒன்றாக இருக்கும்

Advertisement
இந்தியா

கொரோனா தடுப்பூசி அணுகல் உத்தியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி (File)

New Delhi:

கொரோனா தடுப்பூசி மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக உள்ளடக்கிய சமமான தடுப்பூசி அணுகல் கொள்கையை அரசு தெளிவாக வரையறுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா விரைவில் ஒன்றாக இருக்கும் என்றும், அரசு இப்போது அதன் மூலோபாயத்தை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், இந்தியா கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும். இதற்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட, உள்ளடக்கிய மற்றும் சமமான தடுப்பூசி அணுகல் உத்தி தேவைப்படுகிறது. 


இது கிடைக்கும், மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்கிறது. இந்திய அரசு இப்போது அதை செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் மனித சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Advertisement



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement