This Article is From Jun 25, 2020

காங்கிரசுக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைமையேற்க வேண்டும் : சச்சின் பைலட் வலியுறுத்தல்

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை மற்ற மூத்த தலைவர்கள் சமாதானம் செய்து பார்த்தனர். ஆனால், தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தார்.

காங்கிரசுக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைமையேற்க வேண்டும் : சச்சின் பைலட் வலியுறுத்தல்

எல்லை பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Jaipur:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று ராஜஸ்தான் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான சச்சின் பைலட் வலியுறுத்தியுள்ளார்.

ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். இது எங்களுடைய வலியுறுத்தல்' என்று தெரிவித்தார்.

எல்லை பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜக தரப்பிலும் பதிலடி கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை மற்ற மூத்த தலைவர்கள் சமாதானம் செய்து பார்த்தனர். ஆனால், தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில், அவர் மீண்டும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரது கட்சி எம்.எல்.ஏ. பரோசி லால் நேற்று தீ விபத்தை எதிர்கொண்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பைலட், போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பரோசியை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. பரோசி மீது தீ வைக்க முயன்றதாக சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

.