This Article is From Oct 26, 2018

“ரஃபேல் விவகாரம்: சிபிஐ விசாரித்தால் மோடியின் அரசியல் வாழ்க்கை பாதிக்கப்படும்” - ராகுல்

PM Modi: மோடியின் மனநிலையை புரிந்த கொண்டிருப்பதாகவும், ரஃபேல் விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் அரசியல் வாழ்வு பாதிக்கப்படும் என மோடி கருதுவதாக ராகுல காந்தி கூறியுள்ளார்

ரஃபேல் விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் மோடியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

New Delhi:

ரஃபேல் விவகாரம் தொடர்பாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராகுல் காந்தி (Rahul Gandhi) பிரதமர் மோடியை (PM Modi) கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிபிஐ அமைப்பின் தலைமை அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதலில் அதன் இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோர் கட்டாய விடுப்பில் உள்ளனர். இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள், ரஃபேல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது- பயம் காரணமாக அவசரம் அவசரமாக சிபிஐ உயர் அதிகாரிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நிச்சயமாக பிரதமர் மோடி சிக்குவார். அவரை இந்த நாடு தப்ப விடாது.

பிரதமர் மோடியின் மன நிலையை புரிந்து கொண்டுள்ளேன். ரஃபேல் விவகாரத்தை சிபிஐ விசாரித்தால் தனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் என்று பிரதமர் மோடி நம்புகிறார்.
முதன்முறையாக ஒரு நாட்டின் அதிபர் நம் நாட்டின் பிரதமர் மோடியை திருடன் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு பிரதமர் மோடி எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சிபிஐ-க்குள் நடந்த அதிகாரச் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அதன் இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதற்கு ரஃபேல் விவகாரமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கட்டாய விடுப்பில் செல்வதற்கு முன்பாக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோரையும், ரஃபேல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிய பிரசாந்த் பூஷணையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகள் மத்திய அரசுக்கு அதிருப்தி அளித்ததாக கூறப்படுகிறது.

.