This Article is From May 11, 2019

ராகுல் காந்தி NDTV-யிடம் பிரத்யேகப் பேட்டி- டாப் 5 பதில்கள்!

மத்திய பிரதேச ஷுஜால்பூரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, NDTV-க்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

“நரேந்திர மோடி, ராஜீவ், நேரு, இந்திரா குறித்தெல்லாம் பேசுகிறார். எனக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். அவர் பேசுவதெல்லாம் பொய் மட்டும்தான்”

ஹைலைட்ஸ்

  • "Narendra Modi shown us how not to run the country": Rahul Gandhi
  • "He's feeling scared. No one is saying Modi will win": Mr Gandhi
  • "Whoever committed violence, they should be punished" (on 1984 riots)
Shujalpur, Madhya Pradesh:

மத்திய பிரதேச ஷுஜால்பூரில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, NDTV-க்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “நரேந்திர மோடி, ராஜீவ், நேரு, இந்திரா குறித்தெல்லாம் பேசுகிறார். எனக்கு அனைத்து உண்மைகளும் தெரியும். அவர் பேசுவதெல்லாம் பொய் மட்டும்தான்” என்று கூறினார். 

பேட்டியின்போது ராகுல் அளித்த டாப் 5 பதில்கள்:

1.சாம் பிட்ரோடா 1984 சீக்கிய கலவரம் குறித்து பேசிய கருத்து முற்றிலும் தவறானது. அது குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. யார் கலவரத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்.

2.பரப்புரை ஆற்றுவதும், கருத்து சொல்வதும்தன் ஒரு பிரதமரின் வேலை என்று நரேந்திர மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் யுக்திகளை வகுப்பதுதான் ஒரு பிரதமரின் பணி. ஆனால், அவரிடம் அது சுத்தமாக இல்லை. ஜம்மூ காஷ்மீரைப் பாருங்கள். 9 ஆண்டுகள் நானும் மன்மோகன் சிங்கும் சேர்ந்து அந்த மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தோம். பஞ்சாயத்து அளவில் காஷ்மீரை வளப்படுத்தினோம். பெண்களை முன்னேற்றினோம். ஆனால், அவை அனைத்தும் தற்போது வீணாக்கப்பட்டுள்ளன. 

3.ஒரு நாட்டை எப்படி வழி நடத்தக் கூடாது என்பதைத்தான் நரேந்திர மோடி நமக்கு காண்பித்துள்ளார். 

4.நாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு கட்சியின் கீழ் இந்த நாடு ஆட்சி புரிய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பாஜக - ஆர்.எஸ்.எஸ் மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு இடையில்தான் இன்று போட்டி நடந்து கொண்டிருக்கிறது. நான் எங்கு சென்றாலும், மக்கள் அச்சத்தில் இருப்பதை உணர முடிகிறது. 

5.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிலர், நரேந்திர மோடியை வீழ்த்தவே முடியாது என்றனர். ஆனால், நாங்கள் அதை ஏற்கவில்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் போராடினோம். வீதியில் போராடினோம். இப்போது அவர் பயப்படுகிறார். இன்று நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்று யாரும் சொல்வதில்லை. 


 

.