ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Bhopal: மத்திய பிரதேசத்தில் சீக்கிரமே தேர்தல் வர உள்ள நிலையில், இன்று அந்த மாநிலத்தின் தலைநகரான போபாலுக்குச் சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இந்த விசிட் மூலம், தேர்தலுக்கான பிரசாரத்தை தன் தலைமையிலேயே தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பல்லாயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ, போபாலில் 2 கிலோ மீட்டருக்கு சாலை வழிப் பயணம் மேற்கொண்டார் ராகுல்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான புபேந்திர குப்தா, ராகுல் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 2 லட்சம் தொண்டர்கள் வந்துள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபதில் கைலாஷ் - மானசரோவர் யாத்திரைக்கு சென்ற பிறகு, ராகுல் கலந்து கொள்ளும் முக்கியமான பொது நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
இன்று மாலை தொண்டர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றுவார் என்று கூறியுள்ளார், காங்கிரஸின் ம.பி செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதூர்வேதி.
ராகுலின் இந்தப் பிரசார பயணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் மாநிலத்தின் பாஜக தரப்பு, ‘ராகுல் காந்தியின் அரசியல் வரலாறு காங்கிரஸுக்கு அவ்வளவு சாதகமாக இருக்கவில்லை. அவர் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அந்தக் கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. அவருக்கு மத்திய பிரதேசத்தில் இருக்கும் நிலைமை குறித்தும் தெரியாது. ஓட்டுகள் வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தப் பிரசாரக் கூட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது’ என்று கூறுகிறது.
ராகுல், ம.பி-யில் விசிட் அடிப்பதைத் தொடர்ந்து, வரும் 25 ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் போபாலுக்கு வர உள்ளனர். அப்போது நடக்க உள்ள பொது நிகழ்ச்சிகளை பிரபலமடைய வைக்க பாஜக தரப்பு இப்போதிலிருந்தே தீவிரமாக உழைத்து வருகிறது என்று அக்கட்சியின் ராஜ்நிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Posters with photographs of Rahul Gandhi pouring holy water on Shivalinga have come up in Bhopal.
Prime Minister Narendra Modi and BJP president Amit Shah are also expected to be in Bhopal on September 25. Preparations are underway to make the event a huge success state, BJP spokesperson Rajnish Agrawal said.
The Congress chief left for Kailash-Mansarovar on August 31, keeping a promise he had made in April, when his plane plunged hundreds of feet while flying him to a public meeting for the Karnataka polls.
Once there, he shared pictures of Mansarovar lake and captioned that "there is no hatred here". As images and videos of the picturesque lake and mountains flooded Mr Gandhi's Twitter handle, the BJP targeted him for his "ignorance about the cultural and religious significance of the Mansarovar Yatra".
The ruling party had earlier disapproved of his temple visits while campaigning in Gujarat and Karnataka and alleged that the Congress leader was playing a "soft Hindutva" card.