#BechendraModi" என்கிற புதிய ஹாஷ்-டேக்யும் உருவாக்கியுள்ளார் Rahul Gandhi.
ஹைலைட்ஸ்
- Rahul Gandhi, மோடிக்கு எதிராக மீண்டும் பிரசாரம் செய்கிறார்
- அரியானா, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலையொட்டி ராகுல் பிரசாரம்
- PSUகளை, மோடி அரசு தனியார்மயமாக்குவதாக ராகுல் குற்றச்சாட்டு
New Delhi: இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு தனியார்மயப்படுத்த (Privatisation) உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி (Rahul Gandhi), அது குறித்து #BechendraModi" என்கிற புதிய ஹாஷ்-டேக்யும் உருவாக்கியுள்ளார்.
“#BechendraModi, நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை, அவரது நண்பர்களுக்கு விற்கப் பார்க்கிறார். அந்நிறுவனங்களை உருவாக்க பல்லாண்டு காலம் ஆயின. மோடி அரசின் இந்த நடவடிக்கையால் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். நான் இந்தக் கொள்ளைக்கு எதிராக அந்த ஊழியர்களோடு தோளோடு தோள் நிற்பேன்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் ராகுல்.
அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ராகுல் காந்தி, மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கறாரான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல், “அதானி, அம்பானிக்கு லவுட் ஸ்பீக்கர் போல செயல்படுகிறார் மோடி. ஒரு பிக் பாக்கெட் எப்படி திருடுவதற்கு முன்னால் கவனத்தைத் திசைத் திருப்புவானோ, அதைப் போல. உங்கள் கவனத்தை திசைத் திருப்பி உங்கள் பணத்தை தொழிலதிபர்களுக்கு மடைமாற்றி விடுவார் மோடி,” என்று பேசியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல மோடி அரசு, 1.25 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி தள்ளுபடி செய்ததாகவும், மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தின் வருடாந்திர நிதியிலிருந்து பல கோடி ரூபாய் குறைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ராகுல்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அப்போதிலிருந்து அவர் கட்சி விவகாரங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. தற்போது அவர் தேர்தல் களத்துக்கு கம்-பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.