This Article is From Aug 27, 2018

வெள்ள பாதிப்புகளை காண நாளை கேரளா செல்கிறார் ராகுல் காந்தி

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை ஆகஸ்டு 29 ஆம் தேதி பார்வையிட இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

வெள்ள பாதிப்புகளை காண நாளை கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
New Delhi:

புதுடில்லி: வெள்ள பாதிப்பால் கேரள மாநிலத்தில் பெரும் சேதம் அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்ததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளன. மீட்பு பணிகளும், இயல்பு நிலைக்கு திரும்பும் பணிகளும் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில், வரும் ஆகஸ்டு 28 ஆம் தேதி, கேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பார்வையிட இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு நாள் பயணமாக கேரளா செல்ல இருக்கும் ராகுல் காந்தி, வெள்ளம் பாதித்த திருவணந்தப்புரம், செங்கனூர், அங்காமலி, ஆலப்புழா ஆகிய இடங்களை 28 ஆம் தேதி பார்வையிடுகிறார்.

அதனை தொடர்ந்து, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை ஆகஸ்டு 29 ஆம் தேதி பார்வையிட இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, “இந்த ஓணம் பண்டிகை திருநாளில், வேற்றுமைகளை மறந்து அனைவரும் சேர்ந்து கேரளாவை மீட்டெடுக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.