This Article is From Jul 16, 2018

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை பாஜக கொண்டு வந்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும்

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை பாஜக கொண்டு வந்தால் காங்கிரஸ் அதை ஆதரிக்கும்
New Delhi:

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் கொண்டு வந்தால் அதை கட்சி பாகுபாடின்றி ஆதரிக்க நாங்கள் தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை வருகிற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கடந்து இரு கட்சிகளும் ஒன்றிணைனந்து செயல்பட வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

 

.