This Article is From Dec 19, 2018

2 மாத கடும் உழைப்புக்குப் பின் தங்கை பிரியங்காவுடன் டூர் சென்ற ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கை பிரியங்கா வதேராவுடன் சிம்லாவுக்கு சாலை மார்க்கமாக டூர் சென்றுள்ளார்.

2 மாத கடும் உழைப்புக்குப் பின் தங்கை பிரியங்காவுடன் டூர் சென்ற ராகுல்

ராகுல் காந்தியுடன் பிரியங்காவுடைய குழந்தைகளும் சென்றுள்ளனர்.

Shimla:

5 மாநில தேர்தலில் கடும் பணியாற்றிய ராகுல் காந்தி, தங்கை பிரியங்காவுடன் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு சுற்றுலா கிளம்பியுள்ளார். அவர்களுடன் பிரியங்காவின் குழந்தைகளும் டூர் சென்றுள்ளனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஏற்கனவே ஆட்சியில் இருந்தவை என்பதால் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். இந்த நிலையில், சுமார் 2 மாதகாலமாக கடும் பணியாற்றிய ராகுல் காந்தி தற்போது ஓய்வெடுக்கத் தொடங்கியுள்ளார்.bo9g0e8o

சாலையோரத்தில் கட்சி தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரியங்கா

இதையொட்டி, சிம்லாவுக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். அவருடன் தங்கை பிரியங்கா வதேரா மற்றும் அவரது குழந்தைகளும் சுற்றுலா புறப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக இமாச்சல பிரதேசத்திற்கு ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் சென்றுள்ளனர்.

 

வழியில் சாலையோர டீக்கடையில் ராகுல் காந்தி டீ, ஸ்நாக்ஸ், மேகி நூடுல்ஸை சுவைத்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராகுலுக்கு சொந்தமாக வீடு ஒன்று சிம்லாவில் கட்டப்பட்டு வருகிறது.

 

சொந்த காரணங்களுக்காக இமாச்சல பிரதேசம் வந்திருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் கூறியுற்றார். சாரபா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ராகுல், பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகள் தங்கியுள்ளனர்.

 
.