This Article is From Dec 15, 2018

சத்தீஸ்கர் முதல்வரை தேர்வு செய்வதில் ராகுல் காந்தி மும்முரம்

சத்தீஸ்கர் மாநில முதல்வராகும் தகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேருக்கு இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர்தான் முதல்வராக தேர்வாக இருக்கிறார்.

Advertisement
இந்தியா

சத்தீஸ்கரின் புதிய முதல்வரை தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பு ராகுல் காந்தி முன்பு உள்ளது.

New Delhi:

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் முதல்வர்களை தேர்வு செய்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரம் காட்டி வருகிறார்.

சத்தீஸ்கர் மாநில காங்கிரசை பொறுத்தவரையில் அங்கு 4 பேருக்கு முதல்வர் ஆகும் தகுதி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. டி.எஸ். சிங் தியோ, தம்ரத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் சரண் தாஸ் மகந்த் ஆகிய 4 பேரில் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இததொடர்பாக ஏற்கனவே மூன்று கட்டங்களாக ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தளவில் காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்வு செய்யும் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement