Read in English
This Article is From Feb 07, 2019

‘5 நிமிட விவாதத்துக்குத் தயாரா..?’- மோடிக்கு ராகுல் நேரடி சவால்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை, விவாதம் நடத்தத் தயாரா என்று கேட்டு சவால் விடுத்துள்ளார்.

Advertisement
இந்தியா
New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை, விவாதம் நடத்தத் தயாரா என்று கேட்டு சவால் விடுத்துள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், ‘மோடிஜி, உங்களுக்கு 56 இன்ச் மார்பகம் இருப்பதாக கூறியுள்ளீர்கள். என்னுடன் நேருக்கு நேர் நின்று 5 நிமிடம் விவாதம் நடத்த நீங்கள் தயாரா. உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்' என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், ‘நாம் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் குறைந்தபட்சம் ஊதியம் தரப்படும் என்று வாக்குறுதி கொடுக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால், நாட்டில் எந்த மூலையில் இருக்கும் ஏழையும் காங்கிரஸால் பயனடைவர்' என்று பேசினார்.

இதற்கு முன்னரும் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு சவால்கள் விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement