বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 19, 2020

'லடாக் எல்லையில் ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தபோது மத்திய அரசு தூக்கத்தில் இருந்தது' - ராகுல்

இந்திய வீரர்களுக்கு ஆயுதம் அளித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை என்று நேற்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், இந்திய வீரர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும், விதிப்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சர்வதேச எல்லையில் பயன்படுத்தக் கூடாது என்றும் விளக்கம் அளித்தார். 

Advertisement
இந்தியா

லடாக் எல்லையில் நடந்த சண்டையின்போது இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

Highlights

  • லடாக் எல்லையில் நடந்த மோதல் குறித்து ராகுல் கடும் விமர்சனம்
  • மத்திய அரசு தூக்கத்தில் இருந்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
  • இன்று மாலை மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
New Delhi:

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் போராடி இந்திய ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தபோது மத்திய அரசு  தூக்கத்தில் இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

இன்னும் சில மணி நேரத்தில் பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பாக சோனியா காந்தி கலந்து கொள்ளவுள்ளார். இந்த  சூழலில் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக  விமர்சித்துள்ளார். 

முன்னதாக மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், சீனா நடத்திய தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில்,  'இப்போது பின்வரும் விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.  1. கல்வான் ஏரி பகுதியில் சீனா நடத்திய தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. 2. சீனாவின் தாக்குதல் குறித்து எந்த விழிப்புணர்வும்  இல்லாமல் மத்திய அரசு தூங்கி விட்டது. 3. இந்த காரணங்களால் நமது ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு  அளித்திருந்த பேட்டியில், 'சீனாவின் தாக்குதல் என்பது  தேசப்பாதுகாப்பு  குறித்த விஷயம். நமது நிலத்தை யாரும் அபகரிக்க விட மாட்டோம். நாட்டிற்காக  உயிரிழந்த வீரர்களை எண்ணி பெருமை அடைகிறோம். அவர்களின் தியாகம் வீண் போகாது.  இந்த தாக்குதலை சீனா  திட்டமிட்டே நடத்தியுள்ளது. இதற்கு இந்திய படைகள் தக்க பதிலடி கொடுக்கும்' என்று தெரிவித்தார். 

Advertisement

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்திய வீரர்களுக்கு ஆயுதம் அளித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை என்று நேற்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், இந்திய வீரர்கள் ஆயுதம் வைத்திருந்ததாகவும், விதிப்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை சர்வதேச எல்லையில் பயன்படுத்தக் கூடாது என்றும் விளக்கம் அளித்தார். 

Advertisement

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர்.  இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20  பேர் உயிரிழந்தார்கள். 

இதன்பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மீண்டும் பதற்றம் ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையையும் இரு நாடும் மேற்கொள்ளாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Advertisement