Read in English
This Article is From Oct 24, 2018

ரஃபேல் குறித்து கேள்வி எழுப்பியதால் சிபிஐ இயக்குநருக்கு கட்டாய விடுப்பு: ராகுல்

விவசாயிகளின் கடன்களை 1 ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், தொழிலதிபர்களின் கடன்களை அவர் தள்ளுபடி செய்துள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

Advertisement
இந்தியா

ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில், சிபிஐ இயக்குநர் கட்டாய விடுப்பு குறித்து ராகுல் கடுமையாக சாடினார்.

Jhalawar:

தேசத்தின் பாதுகாவலராக வேண்டும் என்று பிரதமர் மோடி வாக்குகளை சேகரிக்கிறார். ஆனால், அவரே திருட்டையும் செய்கிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அருண் ஜெட்லி மகளின் வங்கிக் கணக்கில் மேகுல் சோக்ஸி பணத்தை செலுத்தியுள்ளார் என்றார்.

விவசாயிகளின் கடன்களை 1 ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், இந்தியாவின் 15 முன்னணி தொழிலதிபர்களின் கடன்களை அவர் தள்ளுபடி செய்துள்ளார் என கடுமையாக குற்றம்சாட்டினார்.

மேலும், கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் விவசாயிகள் தவறு செய்தவர்கள். அதே மிகப் பெரிய தொழிலதிபர்கள் கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால், அவர்களுக்கு சிகப்பு கம்பளம் இட்டு வரவேற்பு அளிக்கப்படும். அவர்களுக்கு எந்த வகையில் உதவவேண்டும் என்று வங்கிகள் முன்வருகின்றன என்றார்.

Advertisement

லலித் மோடி லண்டனில் இருக்கிறார். ஆனால், அவர் கோடிக்கணக்கான ரூபாயை உங்களது முதல்வரின் மகனுக்கு அனுப்புகிறார். விஜய் மல்லையா, நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லியை சந்தித்துவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார் என்றார்.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியதால் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டினார்.

Advertisement
Advertisement