This Article is From Mar 31, 2019

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை! ராகுல் திட்டவட்டம்

மக்களவே தேர்தல் 2019: ஆம் ஆத்மியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித், எனினும் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல், சோனியாவுக்கு ஷீலா கடிதம் எழுதியிருந்தார்.

New Delhi:

மக்களவை தேர்தலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இறுதி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வெளியான தகவலில், முன்னாள் டெல்லி முதல்வரும், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீக்சித், உடனான சந்திப்பின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிசி சாகோ மற்றும் வேணுகோபால் ஆகியோர் ராகுல் காந்தியின் இந்த முடிவை தெரிவித்துள்ளனர். இது ஷீலா தீக்சித்தின் 81வது பிறந்த நாளான இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் ஷீலா தீக்சித் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கூட்டணி தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித் கூறும்போது, கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம். கூட்டணி அவசியம் என்று நான் கருதவில்லை. ஆனால் கூட்டணிதான் வேண்டும் என்று கட்சி முடிவு எடுத்தால் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் சக்தி உள்ளது. ஆனால், எல்லோரும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தால் அதற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியிருந்தார். அதில், ஆம் ஆத்மியுடன் நாம் கூட்டணி அமைத்தால் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது வெறுப்பு எற்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், ஏற்கனவே டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என காங்கிரஸ் அறிவித்திருந்த போது, காங்கிரஸை அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். ஒட்டு மொத்த நாடும் மோடி அமித்ஷாவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் போது, காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு உதவுவது போல் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

முன்னதாக, டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில், காங்கிரசுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

.