Read in English
This Article is From Oct 12, 2018

மறைந்த தூய்மை கங்கை தன்னார்வலருக்கு ஆதரவாக ராகுல் காந்தி!

கங்கையை தூய்மை படுத்த கோரி தன்னார்வலர் ஜி.டி அகர்வால் 111 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நேற்று ரிஷிகேஷில் தன்னுடைய 86வது வயதில் உயிரிழந்தார்.

Advertisement
இந்தியா

தூய்மை கங்கையை வலியுறுத்தி தன்னார்வலர் ஜி.டி அகர்வால் எடுத்த முயற்சிகளை பாராட்டி பேசினார். அவர் எடுத்த உறுதிமொழியை தான் முன்னெடுத்து செல்வதாக ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

New Delhi:

ஜி.டி அகர்வால் அவர்கள் தூய்மை கங்கையை வலியுறுத்தி 111நாட்கள் உண்ணாவிரதம், மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ரிஷிகேஷில் உயிரிழந்தார்.

ஜி.டி அகர்வால் கங்கையின் உண்மையான மகன், கங்கை பாதுகாக்க தன்னுடைய வாழ்நாட்களை தியாகம் செய்தவர் என்று வர்ணித்தார். கங்கையை காப்பது இந்த நாட்டை காப்பதற்கு சமம். நாம் அவரை என்றும் மறவாது அவரது உறுதிமொழியை முன்னெடுத்து செல்ல வேண்டுமென்று தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் கூறினார்.

ஜி.டி அகர்வால் கடந்த ஜூன் 22ம் தேதி அரசாங்கம் கங்கையை தூய்மைபடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க துவங்கினார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
 

Advertisement