ரக்சா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட ராகுல், பிரியங்கா!
New Delhi: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ரக்சா பந்தனை முன்னிட்டு, தனது சகோதரி பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், பிரியங்கா காந்தியுடன் உள்ள புகைப்படத்தையும் பதிவிட்டு, அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்குள் என்று இந்தி, ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.
ராகுல் இந்த பதிவிட்ட 40 நிமிடத்தில் 18,000 பேர் இதற்கு லைக் செய்துள்ளனர்.
இதேபோல், பிரியங்கா காந்தியும் ராகுலுக்கு புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மகிழ்ச்சி மற்றும் துக்கமான சமயங்களில் சகோதரருடன் வாழும் போது நான் அன்பு, உண்மை மற்றும் பொறுமை உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டேன். இப்படி ஒரு சகோதரர் கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன், "என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். .
இதைத்தொடர்ந்து, அனைவருக்கும் அவர் ரக்சா பந்தன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் பல்வேறு தருணங்களிலும் தங்களது புகைப்படங்களை இணையதளங்களில் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கடந்த வருட ரக்சா பந்தனுக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தனர்.