This Article is From Jun 07, 2019

ராகுலுக்கு வயநாட்டில் உற்சாக வரவேற்பு! - காங். தலைவராக நீடிக்க தொண்டர்கள் வலியுறுத்தல்!!

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்யப்போவதாக ராகுல் காந்தி கூறி வரும் நிலையில், வயநாடு தொகுதிக்கு ராகுல் நன்றி தெரிவிக்கச் சென்றார்.

வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

New Delhi/Wayanad:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்யப் போவதாக அவர் கூறி வரும் நிலையில், அவர் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். 

வழக்கமாக ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இந்த முறை அவர் அமேதி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமேதி தொகுதியில் அவரை பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். 
 

ki87rhi8

 
இது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. இருப்பினும் வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் அங்கு 3 நாட்கள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். 


இதற்கிடையே மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் வயநாட்டிற்கு வந்த ராகுலுக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 'காங்கிரசுக்கு ராகுல் தேவை', 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ராகுல். நீங்கள்தான் காங்கிரசை வழி நடத்த வேண்டும்' என பொருள்படும் ஃப்ளக்ஸ் பேனர்கள் தொகுதி முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் வைத்திருந்தனர். 

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தாலும் கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் 19 தொகுதியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

வயநாடு மக்களவை தொகுதி மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த 3 மாவட்டங்களுக்கு ராகுல் காந்தி சென்றார். வழியில் மலப்புரத்தில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ மற்றும் ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டார். 

.