This Article is From Jan 11, 2019

துபாயில் ராகுல் காந்தி - இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார்

2 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்நாட்டின் அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளார்.

துபாயில் ராகுல் காந்தி - இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறார்

நேற்று மாலை துபாய் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ராகுல் காந்தி

Dubai/New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அமைச்சர்களையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து பேசுகிறார்.

இந்த தகவலை துபாய் நாளிதழான கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நேற்று மாலை அவர் துபாய் விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரது 2 நாட்கள் பயணம் இன்று முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''துபாய் பயணத்தின்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுவார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அப்போது, இந்திய வம்சாவளியினரின் கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்திருக்கிறார்.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா - அரபிக் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

.