காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் ராகுலே நீடிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
New Delhi: காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உள்ளார். அவர் இந்த முடிவை கைவிடக்கோரி காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகே இருக்கும் மரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கையில் கயிற்றுடன் மரத்தில் ஏறிய ஹனிப் கான் என்ற அந்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதனைப் பார்த்த போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஹனீபுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை பக்குவமாக கீழே கொண்டு வந்தார்.
முன்னதாக நூற்றுக் கணக்கான தொண்டர்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே திரண்டு காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தததை தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து வருகிறார். அவர் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், முடிவை மாற்றிக் கொள்ளும் நிலையில் அவர் இல்லை என்பதுபோல் தெரிகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கரிஸ் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.