This Article is From Mar 13, 2019

''ராஜிவ் கொலை குற்றவாளிகள் மீது வெறுப்பு ஏதும் இல்லை'' : ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பங்கேற்றனர்.

''ராஜிவ் கொலை குற்றவாளிகள் மீது வெறுப்பு ஏதும் இல்லை'' : ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

Chennai:

தன் தந்தையான ராஜிவை கொலை செய்தவர்கள் மீது வெறுப்பு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம். அவர்கள் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர்களை விடுவிக்கவா வேண்டாமா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருத்தங்களை கொண்டு வரும். ஊடகங்களை சந்திப்பதை பிரதமர்  மோடி ஏன் தவிர்த்து வருகிறார். ஊடகங்களை எதிர்கொள்ள மோடிக்கு தைரியம் இருக்கிறதா?.

மத்தியில் உள்ள ஒவ்வொரு அமைப்பையும் பாஜக கைப்பற்றி விட்டது. ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைமை அலுவலகம் உள்ள நாக்பூரில் இருந்து இந்தியா இயக்கப்படுகிறது.'' என்று கூறினார். 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் வைத்து தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்தார். 

.