This Article is From Dec 14, 2018

ம.பி-யில் ஓவர்… ராஜஸ்தானில் தொடரும் இழுபறி… ராகுல் இன்று முக்கிய முடிவு!

ராஜஸ்தானில் கட்சித் தொண்டர்கள், சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்

ஆனால், அஷோக் கெலோட்டை காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதிவிக்கு சிபாரிசு செய்கிறது.

New Delhi:

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாவட்டங்களில் வெற்றியடைந்து, ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. நேற்று காங்கிரஸ் சார்பில் மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் முதல்வரை நியமிப்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. 

ராஜஸ்தானில் கட்சித் தொண்டர்கள், சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அஷோக் கெலோட்டை காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்கிறது. இதையடுத்து நேற்று இரவு இரு தலைவர்களுடனும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

ராஜஸ்தான் காங்கிரஸின் நிர்வாகியான கேசி வேணுகோபால், ‘முதல்வரைத் தேர்ந்தெடுப்பது என்பது சுலபமானது அல்ல. இன்று அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். 

ராஜஸ்தானில் தான், பைலட் மற்றும் கெலோட் ஆகிய இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. ராகுல் இது குறித்து முடிவெடுக்க, தனது தாயான சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இருந்தும் இதுவரை இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் திணறி வருகிறது. 

சச்சின் பைடலட்டின் ஆதரவாளர்கள் இன்று போராட்டத்தில் குதிக்கப் போவதாக தகவல்கள் வந்ததை அடுத்து, அவர் ட்விட்டரில், ‘கட்சித் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். தலைவர் ராகுல் காந்தி எந்த முடிவு எடுத்தாலும், அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன்' என்று பதிவிட்டுள்ளார். 

சத்தீஸ்கரில், டி.எஸ்.சிங் டியோ மற்றும் புபேஷ் பாகலுக்கு இடையில் முதல்வராவதில் கடும் போட்டி நிலவுகிறது. பாகலுக்கு முதல்வராக அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் உள் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

.