This Article is From Jan 23, 2019

அரசியல் என்ட்ரி கொடுத்த பிரியங்கா; பாஜக-வுக்கு ராகுலின் மெஸேஜ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா இன்று அதிகாரபூர்வமாக அரசியலில் குதித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் எடுத்த மூவ் ஆக இது பார்க்கப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • பாஜக, பிரியங்காவின் என்ட்ரியால் அஞ்சும், ராகுல்
  • என் சகோதரி கடுமையான உழைப்பாளி, ராகுல்
  • சகோதரியுடன் வேலை செய்யப் போவதை எதிர்நோக்குகிறேன், ராகுல்
New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா இன்று அதிகாரபூர்வமாக அரசியலில் குதித்துள்ளார். அவருக்கு இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு உத்தர பிரதேச மாவட்டப் பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பாஜக-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் எடுத்த மூவ் ஆக இது பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், ராகுல் காந்தி, பிரியங்காவின் அரசியல் என்ட்ரி குறித்து அமேதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக பேசியுள்ளார். “பிரியங்காவுக்குப் பொறுப்பு கொடுத்த பின்னர், பாஜக அச்சத்தில் உறைந்திருக்கும். என் சகோதரிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பில் மிகச் சிறப்பாக செயலாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடுமையான உழைப்பாளி பிரியங்கா.

b7ubj0fg

 

இந்த அறிவிப்பின் மூலம் நான் உத்தர பிரதேச மக்களுக்கு ஒன்றைத்தான் சொல்ல விரும்புகிறேன். பாஜக, உத்தர பிரதேசத்தை நாசமாக்கிவிட்டது. அதை மீண்டும் உயிர்பிக்க நாங்கள் பாடுபடுவோம். அதற்கு பிரியங்காவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும்.

வெறும் இரண்டு மாதங்களுக்காக பிரியங்காவை உத்தர பிரதேசத்துக்கு அனுப்பவில்லை. காங்கிரஸின் கொள்கைகள் மற்றும் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்லவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏழைகளுக்காக, இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக எப்போதும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். அதை பிரியங்கா உத்தர பிரதேசத்தில் முன்னோக்கி எடுத்துச் செல்வார்” என்று திட்டவட்டமாக கூறினார். பிரியங்காவுடன் சேர்த்து ஜோதிராதித்யா சிந்தியாவும் கிழக்கு உத்தர பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்தன. அவர்கள் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கின. இருவருது கூட்டணி குறித்து பேசிய ராகுல், ‘எனக்கு மாயாவதி மீதும், அகிலேஷ் மீதும் அதிக மரியாதை உள்ளது. மத்தியில் எங்களின் எதிரி ஒரு கட்சிதான். அதை வீழ்த்த அவர்களுக்கு நாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம்' என்று அலட்டிக்கொள்ளாமல் கருத்து தெரிவித்தார். 


 

.