Read in English
This Article is From Jan 03, 2019

கன்னட திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

முன்னணி நடிகர் சிவக்குமார், புனீத் ராஜ்குமார், முன்னணி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

Advertisement
இந்தியா

வருமான வரித்துறையினரின் ஆய்வு கன்னட திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru:

கர்நாடகாவில் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என 20-க்கும் அதிகமானோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ் குமார், புனீத் ராஜ்குமார், முன்னணி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்கள் சோதனைக்குள்ளாகி இருக்கின்றன.

மொத்தம் தற்போது 23 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதில் 200-க்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும் அளவிலான பணம், தங்க ஆவரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பை பொற்கொல்லர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.

இதேபோன்று சினிமா தயாரிப்பாளர் சி.ஆர். மனோகர், விஜய் கிரகந்துரு உள்ளிட்டோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பாவின் மருமகன்தான் நடிகர் சிவராஜ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சகோதரர் புனித் ராஜ் குமார் தேசிய விருதுபெற்ற நடிகராக உள்ளார்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தயாரிப்பாளருமான முனிரத்னாவின் உறவினர். சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் படத்தை ராக்லைன் வெங்கடேஷ் இணைந்து தயாரித்திருக்கிறார்.

Advertisement

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே.ஜி.எப். திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்துரு ஆவார். இதேபோன்று நடிகர் சுதீப்பும் விசாரணை வளைத்திற்குள் சிகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்டபோது, விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பதாகவும், தான் எந்தவித முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement