Read in English
This Article is From Oct 19, 2019

ரூ. 409 கோடி வரி எய்ப்பு புகார்! கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு!!

சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா

பலகோடி ரூபாய் ரொக்கப்பணமும், தங்க நகைகளும் ரெய்டின்போது கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chennai:

ஆன்மிகவாதி கல்கி பகவானின் ஆசிரமம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 409 கோடிக்கு கணக்கில் வராத ரசீதுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சொத்துக்களை விற்றது, பத்திரங்கள் மூலமாக கல்கி பகவான் குழுமம் கணக்கில் வராத தொகையை பெற்றுள்ளது. முதல்கட்டமாக நாங்கள் நடத்திய விசாரணையில் ரூ. 409 கோடிக்கு 2014-15-ம் நிதியாண்டுக்கான ரசீது கிடைத்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆன்மிகவாதி கல்கி பகவானுக்கு சொந்தமான இடங்கள் ஆந்திராவின் வரதாயபாலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இங்கு கடந்த புதன் கிழமையும் சோதனை நடத்தப்பட்டது. 

சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement