பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. யானை உயிரிழந்து விட்டது.
Guwahati: அசாம் மாநிலத்தில் யானை மீது ரயில் ஒன்று மோதியதால் தடம்புரண்டது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் யானையின் உயிர் பிரிந்தது.
அசாமின் திதாபர் மற்றும் மரியானி ரயில் நிலையங்களுக்கு இடையில், அதிகாலை 4.50-க்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. விபத்துக்குள்ளான கவுகாத்தி – லீடோ விரைவு ரயிலில் பயணிகளுடன், சரக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன.
ரயில் தடம்புரண்டதை தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து காலை 7.45-ரயில் மீட்கப்பட்டு காலை 8.06- க்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
சம்பவம் நடந்த பகுதியில் யானைகள் அடிக்கடி தண்டவாளத்தை கடந்து செல்கின்றன. யானைகளைக் கண்டால் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என ரயில் ஓட்டுனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்பாராத விதமாக இந்த சம்பவங்கள் நடந்து விடுகின்றன.