This Article is From Oct 19, 2018

பஞ்சாப் ரயில் விபத்து : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல்

ரயில் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது

பஞ்சாப் ரயில் விபத்து : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல்

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Amritsar:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகேயுள்ள ஜோதா பதக் பகுதியில் இன்று நடந்துள்ள ரயில் விபத்தில் சிக்கி 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தசரா கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடித்து மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில் வந்த சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. இதையடுத்துதான் ரயில் அவர்கள் மீது ஏறிச் சென்று விபத்து நேர்ந்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், அமிர்தசரஸில் நடந்த விபத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரமான சூழலில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்தவமனைகள் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தினர் செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக அறிவித்துள்ளது. விபத்து தொடர்பான விவரங்களை 0183-2223171, 0183-2564485 என்ற எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புவோர் அமிர்தசரஸ் குருநானக் மருத்துவமனையில் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

.