This Article is From Sep 01, 2018

சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி ரெஸ்டாரன்ட்

2015-ம் ஆண்டு போபாலில் இது போன்ற ரயில் பெட்டி ரெஸ்டாரன்ட் தொடங்கப்பட்டது. தற்போது சென்னையில் அப்படி ஒரு ரெஸ்டாரன்ட் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டி ரெஸ்டாரன்ட்

பெரம்பூரில் உள்ள ரயில்வே அருங்காட்சியக வளாகத்தில், புதிதாக ரயில் பெட்டி தீமில் ரெஸ்டாரன்ட் ஒன்றை திறந்துள்ளது இந்திய ரயில்வே. சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரெஸ்டாரன்ட், ஐ.சி.எஃப்ஃபில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி ரயில் பெட்டியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.சி ரெஸ்டாரன்ட்டான இதில், பல உணவு வகைகளை குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழலாம்.

2015-ம் ஆண்டு போபாலில் இது போன்ற ரயில் பெட்டி ரெஸ்டாரன்ட் முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின் இரண்டாவதாக தற்போது சென்னையில் அப்படி ஒரு ரெஸ்டாரன்ட் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பெட்டியின் இன்டீரியர் பழங்கால பொருட்களின் தீமில் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மாடர்ன் ஆர்ட் செய்யப்பட்டுள்ளது. பிரபல ஓவியர் அஸ்மா மேனனும் அவரது குழுவும் வடிவமைப்பை செய்துள்ளனர்.

ஒரே மாதத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரெஸ்டாரன்டில், சைனீஸ், வட இந்திய, தென் இந்திய உணவுகள் பரிமாறப்படுகின்றன. மேலும், ரயில் பயணத்தில் பாரம்பரியமாக கொடுக்கப்படும் சிறப்பு உணவுகளும் இங்கு கிடைக்கின்றது.

ரயில் நிலைய பிளாட்ஃபார்ம், ரயில் பெட்டி என முற்றிலும் ரயில் நிலையத்தை போலவே இருக்கிறது இந்த ரெஸ்டாரன்ட்டின் அமைப்பு. இங்கு ஒரே நேரத்தில் 64 பேர் உணவு அருந்தலாம். இந்த ரெஸ்டாரன்ட் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
 

.