This Article is From Jun 25, 2020

கட்டுக்கடங்காத கொரோனா! ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை நிறுத்தம் - டிக்கெட்டுகள் கேன்சல்

இந்தியாவில் இன்று மட்டும் 16 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 5 லட்சத்தையும், உயிரிழப்பு  15 ஆயிரத்தையும் நெருங்கிக் கொண்டிக்கிறது. 

கட்டுக்கடங்காத கொரோனா! ஆகஸ்ட் 12 வரை  ரயில்  சேவை நிறுத்தம் - டிக்கெட்டுகள் கேன்சல்

முன்னதாக 200 பயணங்கள் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ரயில்களை  இந்திய ரயில்வே அறிவித்திருந்தது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது
  • ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவையை நிறுத்தி வைக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு
  • சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என ரயில்வே விளக்கம்
New Delhi:

கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்திய ரயில்வே வரும் ஆகஸ்ட் 12-ம்தேதி வரையில் ரயில்களை நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 12 வரை  பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே மே மற்றும் ஜூனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு  ரயில்கள்  மட்டுமே இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 

முன்னதாக 200 பயணங்கள் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ரயில்களை  இந்திய ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த ரயில்களில் செல்லும் பயணிகளுக்கு வெப்பநிலைமானி மூலம் காய்ச்சல் சோதனை செய்யப்பட வேண்டும். மேலும், மத்திய அரசு வகுத்துள்ள அனைத்து  சுகாதார  விதிகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

முக கவசம், சானிடைசர் பயன்பாடு உள்ளிட்டவற்றை கடைபிடிக்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு  இயக்கப்படும் சிறப்பு  ரயில்களில் கேட்டரிங் சேவை இருக்காது. படுக்கை வசதி, கம்பளி, போர்வை  வசதிகள் வழங்கப்பட மாட்டாது.  பயணிகள் சொந்தமாக இவற்றையெல்லாம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  

ஏசி  பெட்டிகளில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிகளின்படி வெப்பநிலை வைக்கப்படும். 

இந்தியாவில் இன்று மட்டும் 16 ஆயிரத்து 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 5 லட்சத்தையும், உயிரிழப்பு  15 ஆயிரத்தையும் நெருங்கிக் கொண்டிக்கிறது. 

உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா,  பிரேசில்,  ரஷ்யா ஆகியவை உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. 

.