This Article is From Jan 01, 2020

Railways Fare Hike- இன்று முதல் ரயில் கட்டண உயர்வு அமலாகிறது!

Railways Fare Hike-முக்கிய ரயில்களான ஷாதாப்தி, ராஜ்தானி மற்றும் டூரோன்டோ உள்ளிட்ட ரயில்களும் இந்தக் கட்டண உயர்வுக்குக் கீழ் வரும். 

Railways Fare Hike- இன்று முதல் ரயில் கட்டண உயர்வு அமலாகிறது!

Railways Fare Hike- முன்பதிவுக் கட்டணம், சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் முன்னரே முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளில் எந்தவித கட்டண மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

New Delhi:

Railways Fare Hike- இந்திய ரயில்வே துறை, தனது ரயில் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அவை இன்று முதல் அமலுக்கு வருகிறது. புறநகர் ரயில்களுக்கு கட்டண உயர்வு அமல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசி அல்லாத சாதாரண பயணத்துக்கான கட்டணம், புறநகர் சேவை இல்லாத மற்ற ரயில் சேவைகளுக்கான கட்டணத்தை கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தியுள்ளது ரயில்வே துறை. 

அதேபோல, மெயில்/எக்ஸ்பிரஸ் ஏசி இல்லாத பிரிவுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏசி வகுப்புப் பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசாவும் உயர்த்தியுள்ளது ரயில்வே துறை. 

முக்கிய ரயில்களான ஷாதாப்தி, ராஜ்தானி மற்றும் டூரோன்டோ உள்ளிட்ட ரயில்களும் இந்தக் கட்டண உயர்வுக்குக் கீழ் வரும். 

டெல்லி - கொல்கத்தா இடையில் செல்லும் ராஜ்தானி ரயில், 1447 கிலோ மீட்டர் ஓடும். அதில் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தினால், பயணச் சீட்டுக் கட்டணத்தில் 58 ரூபாய் உயர்த்தப்படும். 

அதே நேரத்தில், முன்பதிவுக் கட்டணம், சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் முன்னரே முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளில் எந்தவித கட்டண மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.