Read in English
This Article is From Oct 15, 2018

விமானங்களை போல், இனி ரயிலிலும் விபத்துகளை கண்டறியும் முறை!

வீடியோ/குரல் பதிவு அமைப்பு விபத்தில் ஏற்படும் செயல்பாட்டு பிரச்சனைகள் மற்றும் மனித காரணிகளை அடையாளம் காண உதவும்

Advertisement
இந்தியா

லோகோ கேப் வாய்ஸ் ரெக்கார்டிங் சிஸ்டத்தை ரயில்களில் பொருத்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

New Delhi:

இந்திய ரயில்களில் விரைவில் விமானத்தில் இருப்பதுபோல, வாய்ஸ் ரெக்கார்ட்ஸ் அல்லது பிளாக் பாக்ஸ் பொருத்தப்படவுள்ளது. இதன்மூலம் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

இந்திய ரயில்வேதுறை, ரயில்களில் லோகோ கேப் வாய்ஸ் ரெக்கார்டிங் கருவிகளை பொருத்த முடிவு செய்துள்ளது.

வீடியோ/குரல் பதிவு அமைப்பு விபத்தில் ஏற்படும் செயல்பாட்டு பிரச்சனைகள் மற்றும் மனித காரணிகளை அடையாளம் காண உதவும்.

விமானத்தில் பயன்படுத்தப்படும் பிளாக் பாக்ஸ் இரண்டு பாகங்களாக இருக்கும். அவை, விமான தரவுகளின் பதிவு மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்ட் இவை இரண்டும் விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும் பகுதியாகும்.

Advertisement
Advertisement