This Article is From Nov 08, 2019

Rain Alert - உருவானது ‘Bulbul’ புயல்… தமிழகத்துக்கு ‘கனமழை’ வாய்ப்பு! - முழு விவரம் உள்ளே

Rain Alert - கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

Rain Alert - உருவானது ‘Bulbul’ புயல்… தமிழகத்துக்கு ‘கனமழை’ வாய்ப்பு! - முழு விவரம் உள்ளே

Rain Alert - தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 8 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை, ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

வங்கக் கடல் பகுதியில் ‘புல் புல்' (Bulbul Storm) புயல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு மழை (TN Rains) வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் (IMD) தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப் பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. ‘புல் புல்' என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக வங்கதேச மற்றும் மேற்கு வங்கம் நோக்கி நகரக்கூடும். தமிழக மீனவர்கள், அடுத்த 2  நாட்களுக்கு மத்திய வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 8 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை, ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்படும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 சென்டி மீட்டர் மழையும், சிவகங்கையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது,” எனக் கூறியுள்ளார்.

.