இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரா வரை உள் தமிழக நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாலும், அதே பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றின் சுழற்சியாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 தினங்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாட்களுக்கு பின்னர் நேற்று உள் தமிழகத்தில் சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, இன்றும் பரவலாக இடி மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.