இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மாலத்தீவு பகுதியில் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது என்று அவர் கூறினார்.