This Article is From May 27, 2019

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

"வரும் புதன் கிழமையன்று தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது”

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

"சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்ஷியஸும் இருக்கும்."

தென் மேற்குப் பருவமழை ஆரம்பிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்பது குறிதுத சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், “கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.

சாதரண நாட்களைவிட இன்று தமிழகத்தில் வெப்பத்தின் அளவு 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரை வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்ஷியஸும் இருக்கும்.

வரும் புதன் கிழமையன்று தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.