தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Mumbai: நாடு முழுவதும் இந்த வாரமும் பருவமழை 35 சதவீதம் சராரிசயை விட குறைவாக பெய்ந்துள்ளது. கடந்த வாரமும் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் பருவமழை ஜூன் 1-ம்தேதி தொடங்கி பெய்து வருகிறது. இதைனை எதிர்பார்த்துதான் நாட்டின் 55 சதவீத விவசாயமும், இந்திய பொருளாதாரமும் உள்ளது.
2.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இந்திய பொருளாதாரத்தில் 15 சதவீதம் என்பது விவசாயமும் வேளாண் பொருட்களும் ஆகும். இந்த நிலையில் இந்த வாரம் மட்டும் பருவமழை வழக்கத்தை விட 35 சதவீதம் குறைந்துள்ளது.
ஒட்டு மொத்த அளவில் பார்க்கும்போது ஜூன் 1-ம் தேதியில் இருந்து தற்போது வரை 19 சதவீதம் குறைவான மழைப் பொழிவை இந்தியா பெற்றுள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் அடுத்து வரும் நாட்களில் மழை இருக்கலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
பருவமழை குறைந்ததாலும், கோடை வெயில் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தமிழக மக்கள் பெரும் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.