This Article is From May 25, 2020

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

5 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.  அதனால், வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களை கேட்டு கொண்டு உள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 4ம்தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது. இதையடுத்து அனல் வாட்டி எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. 

சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.

Advertisement

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிகத்தில் வெப்பச்சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேற்கு மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு மற்றும் வேலூர் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். 5 மாவட்டங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.  அதனால், வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களை கேட்டு கொண்டு உள்ளது.

Advertisement

விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement