This Article is From Apr 18, 2019

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெப்பம், இயல்பை விட அதிகமாக இருந்து வருகிறது

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெப்பம், இயல்பை விட அதிகமாக இருந்து வருகிறது. உள் தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.

வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

அதேநேரம் மத்திய மகாராஷ்டிராவில் இருந்து உள் கர்நாடகம், உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.