ஒட்டுமொத்த அளவில் பார்க்கும்போது தற்போது வரை சராசரியை விட 9 சதவீத மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
Mumbai: நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த வாரம் மட்டும் மழைப் பொழிவு 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கியது.
இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக இந்த பருவமழை உள்ளது. வாரந்தோறும் நாடு முழுவதும் பெய்யும் மழைப்பொழிவு கணக்கிடப்பட்டு அது தகவலாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் வழக்கத்தை விட குறைவான மழைப்பொழிவு காணப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி சராசரியைக் காட்டிலும் 42 சதவீதம் கூடுதல் மழையை இந்தியா பெற்றிருக்கிறது. தென்மேற்கு பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பர் வரையில் நீடிக்கும்.
ஒட்டுமொத்த அளவில் பார்க்கும்போது தற்போது வரை சராசரியை விட 9 சதவீத மழை குறைவாகவே பெய்திருக்கிறது.