This Article is From Nov 07, 2018

"ராஜபக்சே தான் பிரதமர்" பின்வாங்க மறுக்கும் சிறிசேனா!

ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலக வைத்ததிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. நவம்பர் 16 வரை பாராளுமன்றத்தை முடக்கியுள்ள சிறிசேனா

113 எம்.பிக்களுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெல்வோம் என்று பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 

Colombo:

அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.  3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை சென்ற வாரம் திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா, சிறிசேனா மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் புறம்பானது என்றார். இதனையடுத்து சிறிசேனா பாராளுமன்றத்தில் எங்களுக்கு ஆட்சியமைக்க தேவையான எம்பிக்கள் உள்ளனர். 113 எம்.பிக்களுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வெல்வோம் என்று பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 

ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலக வைத்ததிலிருந்து பின்வாங்கப்போவதில்லை. நவம்பர் 16 வரை பாராளுமன்றத்தை முடக்கியுள்ள சிறிசேனா. ரணிலுக்கு பதில் ராஜபக்சேவை பிரதமராக்கியது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. 

ரணில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார். அதற்கு சட்டப்படி நான் தான் பிரதமர். அதனால் வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார்.  இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்பிக்கள் தேவை. பெரும்பான்மையோடு இருக்கிறோம் என்று இருவரும் சொல்வதால் இலங்கையில் அரசியல் சூழல் மோசமான நிலைக்கு மாறியுள்ளது.

.